“கஷோக்கியின் கொலைக்கும் சவுதி இளவரசருக்கும் எவ்வித தொடர்புமில்லை”

சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கியின் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சவுதி இளவரசருக்கு எவ்வித தொடர்பும் இல்லை என சவுதியின் வெளியுறவுத்துறை அமைச்சர் அடோல் அல்-ஜுபேர் தெரிவித்துள்ளார்.

கஷோக்கி கடந்த ஒக்­டோபர் இரண்டாம் திகதி துருக்­கியின் இஸ்­தான்புல் நக­ரி­லுள்ள சவூதி தூத­ர­கத்தில் வைத்து கொடூ­ர­மான முறையில் படு­கொலை செய்­யப்­பட்­டி­ருந்தார்.

இதேவேளை அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை தன்னால் வெளியி­டப்­பட்ட அறிக்­கையில், கஷோக்­கியின் கொடூர படு­கொலை குறித்து சவூதி அரே­பிய முடிக்­கு­ரிய இள­வ­ரசர் நன்­றாக அறிந்­துள்­ளதை தன்னால் அறி­ய­மு­டி­வ­தாக குறிப்­பிட்டு அவர் அந்தப் படு­கொ­லைக்கு உத்­த­ர­விட்டோ அன்றி உத்­த­ர­வி­டா­மலோ இருந்­தி­ருக்­கலாம் எனத் தெரி­வித்­தி­ருந்தார்.

அமெ­ரிக்கப் புல­னாய்வுப் பிரி­வான சி.ஐ.ஏ. இந்தப் படு­கொலை குறித்து 100 சத­வீதம் உறு­திப்­ப­டுத்­த­வில்லை எனக் கூறியுள்ளது.

ட்ரம்ப் அந்த அறிக்­கையில், உலகம் மிகவும் அபா­ய­க­ர­மான இட­மா­க­வுள்­ளது. சவூதி அரே­பியா, ஈரா­னுக்கு எதி­ராக அமெ­ரிக்­காவின் நட்­பு­ நாடா­கவும் உள்­ளது. ஈரா­னி­யர்கள் அமெ­ரிக்­கர்கள் பல­ரையும் அப்­பாவி மக்­க­ளையும் கொன்று வரு­கின்ற நிலையில் சவூதி அரே­பிய அர­சாங்­க­மா­னது மத்­தி­ய­கி­ழக்கு எங்கும் அடிப்­ப­டை­வாத மதத் தீவி­ர­வா­தத்­திற்கு எதி­ரான போராட்­டத்­திற்­காக பில்­லி­யன்­க­ணக்­கான பணத்தைச் செல­விட்டு வரு­கி­றது எனத் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் இது குறித்து தெரிவித்த சவுதி வெளியுறவுத்துறை அமைச்சர் அடேல் அல்ஜுபேர்,

எங்கள் தலைமை யாராலும் நீக்கி முடியாத உயரத்தில் உள்ளது. மன்னர் சல்மானும், இளவரசர் முகமது பின் சல்மானும் அவ்வாறான நிலையில் உள்ளவர்கள்.

அதனால் எங்கள் மன்னர் அல்லது பட்டத்து இளவரசரை இகழ்வது போன்ற எந்த விவாதத்தையும் எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது.

இந்த கொலை தொடர்பான விசாரணைகள் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு காரணமானவர்களை நாங்கள் தண்டிப்போம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!