நியூசிலாந்து தீவு ஒன்றில் 145 திமிங்கிலங்கள் இறந்துள்ள சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு

நியூசிலாந்தின் தீவு ஒன்றில் திமிங்கிலங்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளது.நேற்று அதிகாலை மொத்தமாக 145 திமிங்கிலங்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளது.

தீவானது தனித்த தீவாக காணப்படுவதுடன் குறித்த பகுதியில் 20 திமிங்கிலங்கள் இறந்து கரை ஒதுங்கிய நிலையில் சில மணி நேரத்தில் 145 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியது.

இதில் சில உயிருக்கு போராடிய நிலையில் கரை ஒதுங்கி பின் இறந்துள்ளது.

இதுவரையிலும் திமிங்கிலங்கள் இறந்ததற்கான காரணம் கண்டறியப்பட்வில்லை.

இதற்கு பின்வரும் விஷயங்கள் காரணங்களாக இருக்க வாய்ப்புள்ளது.

1. சுற்றுசூழல் மாற்றம்

2. கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகள்

3.கடலில் கலக்கும் வேதிப்பொருட்கள்

4. பூமியின் வெப்பநிலை அதிகரிப்பது

5.கடலுக்கான நீர் சுழற்சி, மழை இல்லாத காரணத்தால் இப்படி ஏற்கனவே கடந்த வாரம் இந்தோனேசிய கடலில் இது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கரை ஒதுங்கிய திமிங்கிலத்தின் வயிற்றில் கிலோ கணக்கில் பிளாஸ்டிக் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

திமிங்கிலத்தின் வயிறு கிழிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

அதன் வயிற்றில் 6 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!