அடுத்த ஆண்டுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை எவ்வளவு தெரியுமா?

அடுத்த ஆண்டுக்காக மாத்திரம் 5 ஆயிரத்து 800 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் செலுத்த வேண்டியுள்ளது எனத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி, ராஜபக்ஷ- மைத்திரி கூட்டணிக்கு அதிகாரம் மட்டுமே தேவைப்படுகின்றது. மாறாக அவர்களுக்கு நாட்டினையும் மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்.

அரசாங்கம் ஒன்று இல்லாத நிலைமையில் நாட்டின் பொருளாதாரம் பாரிய அளவில் வீழ்ச்சி கண்டு வருகின்றது. நவம்பர் மாதம் என்பது இலங்கையின் சுற்றுலாத்துறை பலமடையும் மாசமாகும். ஆனால் இன்று நாட்டின் சுற்றுலாத்துறை பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது. அதுமட்டுமல்ல வழமையாக நவம்பர் மாதம் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வழங்கப்பட வேண்டும். ஆனால் இன்றுவரை பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்கப்படவில்லை. அந்தளவு மோசமான நிலைமைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!