அமைதியான ஆட்சியை நிலைநாட்ட ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஏரான்

மக்களின் பிரச்சினைகளை தீர்த்து சுபீட்சமான, சக்திமிக்க நாடொன்றை உருவாக்கவே 2015 ஆம் ஆண்டு சகல மக்களும் ஒன்றிணைந்து நல்லாட்சி அரசாங்கத்தை தோற்றுவித்தனர். இதற்காக ஜனநாயகம், சட்டவாட்சி மற்றும் பாராளுமன்றத்தின் மேன்மை நிலைநாட்டப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.

பணம் மற்றும் பதவிகளுக்காக பாராளுமன்ற உறப்பினரின் கொள்கைகளை குறைத்தது மதிப்பிட முடியாது. ஆகவே கடந்த ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி நாட்டில் காணப்பட்ட அமைதியான ஆட்சியை நிலைநாட்ட ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜனாதிபதி ஜனநாயக கொள்கைகளுக்கு மதிப்பளிக்காமல் செயற்படுவது அருவருக்கக் கூடியது என்றும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விடயத்தை ஏரான் விக்கிரமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!