அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் காலமானார்

பரக் ஒபாமாவுக்கு முன்னர் அமெரிக்காவை ஆட்சி செய்த முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் தந்தையும் அந்நாட்டின் மற்றொரு அதிபருமான ஜோர்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் (ஜோர்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ்) காலமானர்.அந்நாட்டின் ஜனாதிபதியாக கடந்த 1989 முதல் 1993 ஆம் ஆண்டுவரை ஜனாதிபதியாக பதவி வகித்தவர்.

அதற்கு முன்னதாக 1981 முதல் 1989 வரை 8 ஆண்டுகாலம் துணை அதிபராகவும் இவர் இருந்துள்ளார்.

இவரது மகனான ஜோர்ஜ் டபிள்யூ. புஷ், அந்நாட்டின் அதிபராக 2001 முதல் 2008 ஆம் ஆண்டுவரை இருமுறை அந்நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளார்.

வயோதிகம் சார்ந்த காரணங்களால் வீட்டில் ஓய்வெடுத்துவந்த ஜோர்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ் தனது 94 வயதில் நிமோனியா எனப்படும் கபவாதம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த ஆண்டு கடுமையான உடல்நலக் குறைவால் ஹூஸ்டன் நகரில் உள்ள மெத்தடிஸ்ட் மருத்துவமனையில் சுமார் 15 நாட்கள் சிகிச்சைபெற்ற அவர் ஓரளவுக்கு குணமடைந்து வீடி திரும்பினார்.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் இன்று காலமானதாக அவரது செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

அவரது இறுதி சடங்குகள் தொடர்பான விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!