மஹிந்த, அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தற்போதைய அமைச்சரவை பதவி வகிப்பதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த நீதிப் பிரேரணை மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவை இயங்க இடைக்கால தடையுத்தரவை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கடந்த 23 ஆம் திகதி தாக்கல் செய்த நீதிப் பேரணை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஓபேசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!