குழப்பி விட்டது நீதிமன்றம்!

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவினால், புதிய அரசாங்கம் முன்னெடுத்த அனைத்து நடவடிக்கைகளும் முடங்கி விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் தளத்திலேயே நாமல் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியால் பொருளாதாரத்துக்கு ஏற்படுத்தப்பட்ட சேதத்தை சரியாக்குவதற்கு முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்களுக்கு மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பால் தடையேற்பட்டுள்ளது. ஒக்டோபர் மாதம் புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டதன் பின்னர் மக்களின் அடிப்படை விடயங்களுக்காக வரி நிவாரணத்தைப் பெற்றுக்கொடுத்தல், எரிபொருள் விலையைக் குறைத்தல் உள்ளிட்ட சகல வாழ்வாதார செலவீனங்களையும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதெனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!