சிங்­கள மாண­வர்­க­ளின் செயல் ஏற்­கத்­தக்­க­தல்ல -மாவை எம்.பி.!!

யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­லைக் கழ­கத்­தின் வவு­னியா வளாக சிங்­கள மாண­வர்­க­ளின் செயற்­பாட்டை வன்­மை­யா­கக் கண்­டிக்­கின்­றோம் என்று தெரி­வித்­தார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சேனா­தி­ராசா.

வவு­னியா வளா­கத்­தில் சிங்­கள மாண­வர்­கள் புத்­தர் சிலை ஒன்றை
நிறு­வு­வ­தற்கு நேற்று முன்­தி­னம் முற்­பட்­ட­னர். நிர்­வா­கம் அதற்கு அனு­மதி வழங்­க­வில்லை. ஊழி­யர்­க­ளைப் பூட்டி வைத்து மாண­வர்­கள் போராட்­டம் நடத்­தி­னர். பொலி­ஸா­ரின் தலை­யிட்­டால் ஊழி­யர்­கள் விடு­விக்­கப்­பட்­ட­னர். வளா­கத்­தில் பெரும் பதற்­றம் ஏற்­பட்­ட­து­டன் வளா­க­மும் இழுத்து மூடப்­பட்­டது.

இது தொடர்­பில் கருத்­துத் தெரி­வித்­த­போதே நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சோ.சேனா­தி­ராஜா மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.
அவர் தெரி­வித்­தா­வது-,

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் கவ­லை­ய­டை­கின்­றோம்.
பல்­க­லைக் கழ­கங்­க­ளிலோ பொது இடங்­க­ளிலோ மத இன ரீதி­யான சிலை­கள் வைக்­கும் போது அவற்­றின் நிர்­வா­கங்­க­ளி­டம் முறை­யான அனு­மதி பெற்­றுக் கொள்­ளப்­பட வேண்­டும். வவு­னியா வளா­கத்­தில் சிங்­கள மாண­வர்­கள் புத்­தர் சிலை நிறுவ முயற்­சித்­துள்­ள­னர். இத­னால் ஏற்­பட்ட பதற்­றத்­தால் வளா­கம் கால­வ­ரை­ய­றை­யின்றி மூடப்­பட்­டுள்­ளது.

இன, மத ரீதி­யான முரண்­பா­டு­களை அடுத்து பல்­க­லைக்­க­ழ­கம் வரை­ய­றை­யின்றி முடப்­ப­டு­வது அனு­ம­திக்­க­மு­டி­யா­தது. மாண­வர்­க­ளின் கல்வி பாதிக்­கப்­ப­டு­கின்­றது.

இன, மதங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கம் பாதிக்­கப்­ப­டும். இது நாட்­டில் பெரும் குழப்­பங்­கள் ஏற்­பட வழி­வ­குக்­கும். உயர் கல்வி அமைச்­சும் தலைமை அமைச்­ச­ரும் குறிப்­பிட்ட வளா­கத்­து­டன் பேச்சு நடத்­திச் சுமு­க­மான முடிவு எட்­டப்­பட வேண்­டும்.

அதே­வேளை, வவு­னியா மாவட்­டச் செய­ல­கத்­தி­லும், புத்­தர் சிலை நிறுவ மாவட்­டச் செய­லர் நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­தார். அது அங்கே குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. மாவட்­டத்­தின் ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தில் இது தொடர்­பில் ஆராய்ந்­தி­ருந்­தோம். இதன் பின்­னர் அந்த நட­வ­டிக்கை நிறுத்­தப்­பட்­டி­ருந்­தது – என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!