சுய­நல எண்­ணம் கொள்­ளாது மே-18இல் ஒன்­றி­ணை­யுங்­கள்!!

தாயக மீட்­புக்­கான ஆயு­தப் போராட்­டம் உலக நாடு­க­ளின் ஆத­ர­வு­டன் முள்­ளி­வாய்க்­கால் மண்­ணில் முடி­வுக்­குக் கொண்டு வரப்­பட்­டது. போரில் தமது பிள்­ளை­களை மாவீ­ரர்­க­ளா­கக் கொடுத்த பெற்­றோர், உற­வி­னர்­கள், போரைத் தாங்­கிய போரா­ளி­கள், மக் கள் அனை­வ­ர­தும் மன எண்­ணங்­க­ளைப் புரிந்து அனை­வ­ரும் முள்­ளி­வாய்க்­கால் மண்­ணில் மே – 18 அன்று ஒன்­றி­ணைய வேண்­டும்.

இவ்­வாறு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் சபா.குக­தாஸ் வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார். மே-18 ரணங்­க­ளைச் சுய­லாப அர­சி­யல் ஆக்­கா­தீர்­கள் என்று அவர் விடுத்­துள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறி­பிட்­டுள்­ளார். அதில் உள்­ள­தா­வது,

ஈழத் தமி­ழர்­க­ளின் தாயக மீட்­புப் போராட்­டம் 21 நாடு­க­ளின் ஆத­ர­வு­டன் குறிப்­பாக இந்­தியா, சீனா போன்ற நாடு­க­ளின் ஆத­ர­வு­டன் முள்­ளி­வாய்க்­கால் மண்­ணில் முடி­வுக்­குக் கொண்­டு­வ­ரப்­பட்­டது.

போரில் ஆயி­ரக்­க­ணக்­கான அப்­பாவி மக்­கள் கொல்­லப்­பட்­ட­னர். போர் முடி­வுக்­குக் கொண்­டு­வ­ரப்­பட்­டமை எந்­தத் தமி­ழ­னும் வர­லாற்­றில் மறக்க முடி­யாத – மன்­னிக்க முடி­யாத – ஆறாத வடு­வா­கப் பதிந்­துள்­ளது.
ஆயி­ரக் கணக்­கா­னோர் கையி­ழந்து, கால் இழந்து, முள்­ளந்­தண்­டுப் பாதிப்­புக்­குள்­ளாகி இன்­று­வரை மீள­மு­டி­யாத சுமைக்­குள் தள்­ளப்­பட்டு வறு­மைக்­குக்­குள் முடக்­கப்­பட்­டுள்­ள­னர்.

பொரு­ளி­யல் நோக்­கில் சொல்­லப்­போ­னால் வாழ்­வா­தா­ரத்­துக்­காக – வாழும்­வரை வாழு­வோம் எனும் போரா­டும் நிலைக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ள­னர்.

போரால் பாத­திக்­கப்­பட்டு முகாம்­க­ளில் பல இன்­னல்­களை அனு­ப­வித்­தும், மீள்­கு­டி­ய­மர்ந்­தும் இன்­று­வரை மீள்­எ­ழுச்­சிக்­கான உத­வி­கள் இன்­றிக் கண்­ணீ­ரு­டன் மக்­கள் வாழ்­கின்­ற­மை­யை­யும் காண்­கின்­றோம்.

இந்­தப் பின்­பு­லத்­தில் மே-18 நிகழ்வை நடத்த ஏற்ற இறக்­கங்­க­ளைக் காட்டி விமர்­சிப்­பது இனத்­துக்­கும், ஒன்­று­மைக்­கும் ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல. நாக­ரீ­க­மா­ன­தும் அல்ல.
சக்­தி­மிக்க தமி­ழர்­கள் அனை­வ­ரை­யு­மு் நினை­வு­கூ­ரும் நாளில் ஒன்­றித்­துச் செயற்­ப­டு­வதே எதிர்­கா­லத்­தில் எம் இனத்­தின் தாயக விடு­தலை விடி­ய­லுக்­கா­கப் பக்­க­ப­ல­மாக இருக்­கும்.

வெளிச் சக்­தி­க­ளுக்கு இடங்­கொ­டுக்­காது தாயக பூமி­யில் வாழும் அனைத்­துத் தமிழ் நெஞ்­சங்­க­ளும், உற­வு­க­ளும் கட்சி பேத­மின்றி இத­ய­சுத்­தி­யு­டன் செயற்­ப­டு­வ­து­தான் இனத்­தின் இருப்பை உறுதி செய்­யும்.- என்­றுள்­ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!