சாலையில் சாக்லேட் ஆறாக ஓடியதால் பரபரப்பு!..

பெர்லின்: நம்மூரில் தார் சாலையே தரமில்லாமல் இருக்கும். ஜெர்மனியில் சாலை எங்கும் ‘சாக்லேட்’ ஆறாக ஓடியதால், மக்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.கிறிஸ்துமஸ் பண்டிகை காலம் என்பதால் ஐரோப்பிய நாடுகளில் ‘கேக்’, ‘சாக்லேட்’ உள்ளிட்ட இனிப்பு வகைகளின் தயாரிப்பு அமோகமாக நடக்கிறது.

ஜெர்மனியின் வெர்ல் நகரத்தில் உள்ள டிரய்மெய்ஸ்டர் சாக்லேட் தொழிற்சாலையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக திரவ நிலையில் ‘சாக்லேட்’ வைக்கப்பட்டிருந்த கொள்கலன்களில் கசிவு ஏற்பட்டது. இது சிறிது நேரத்தில் தொழிற்சாலையை கடந்து சாலையில் ஆறாக ஓடியது.

‘டன்’ கணக்கில் உருகிய ‘சாக்லேட்’ பத்து சதுர கி.மீ., அளவுக்கு படர்ந்தது. காலை பனியில் விரைவாக உறைய, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின் தீயணைப்பு படையினர் களத்தில் இறங்கினர். சுடுதண்ணீர் ஊற்றி சாலையில் தேங்கியிருந்த ‘சாக்லேட்டை’ அப்புறப்படுத்தினர்.’சாக்லேட்’ நிறுவனத்தின் இயக்குனர் மார்கஸ் கூறுகையில்,” சாலையில் ‘சாக்லேட்’ ஓடியதால், ‘இனிப்பான ஆபத்தை’ மக்கள் சந்தித்தனர்.

இப்பகுதியில் ‘சாக்லேட் இல்லாத கிறிஸ்துமஸ்’ வருமோ என்று அஞ்சினர். நல்லவேளை ஒரு கொள்கலனில் மட்டுமே பிரச்னை ஏற்பட்டது. பெரிய அளவில் பாதிப்பு இல்லை. உற்பத்தியை விரைவில் துவக்குவோம். இரண்டு மணி நேரத்திற்கு தான் சாலை மூடப்பட்டது. பின் சகஜ நிலை திரும்பியது,”என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!