தொடர்ந்து சரியும் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு – வெளிநாட்டு கடன்சுமை அதிகரிப்பு

????????????????????????????????????
அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில், ஒரே வாரத்தில் சிறிலங்காவின் கடன்சுமை 47 பில்லியன் ரூபாவாவினால் அதிகரித்துள்ளது.

அமெரிக்கா டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இந்த மாதம் தொடர்ச்சியான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.

இந்த வாரத் தொடக்கத்தில், 157.46 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி நேற்று 159.04 ரூபாவாக வீழ்ச்சி கண்டது.

இந்த ஒரு வாரத்தில் மாத்திரம், அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் பெறுமதி 1.58 ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன் காரணமாக சிறிலங்காவின் கடன் சுமையும் வெகுவாக அதிகரித்து வருவதாக சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் கூறியுள்ளார்.

சிறிலங்காவின் வெளிநாட்டுக் கடன் சுமார் 30 பில்லியன் டொலர்களாக இருந்தது.

கடந்த ஒரு வாரத்தில், சிறிலங்கா ரூபாவின் மதிப்பிறக்கத்தினால், கடன் சுமை 47 பில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளது. என்றும் அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!