ஜனாதிபதி மீது வழக்கு – தயாராகும் பொன்சேகா!

தனது அடிப்படை உரிமையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்திருப்பதாக தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா உயர்நீதிமன்றம் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சு பதவியை வழங்க மறுத்ததன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அடிப்படை உரிமையை மறுத்திருப்பதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

நேற்று புதிய அமைச்சரவை பொறுப்பேற்றிருந்தது. அமைச்சரவை பெயர் பட்டியலில் சரத் பொன்சேகாவின் பெயர் உள்ளடக்கியிருந்த போதிலும் ஜனாதிபதி அவரின் பெயரை நீக்கியுள்ளார்.முன்னதாக சரத் பொன்சேகாவிற்கு அமைச்சு பதவி வழங்கப் போவதில்லை எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போதும் ஜனாதிபதி உறுதியாக கூறியிருந்தார்.

அந்த வகையில் இன்றை தினம் சரத் பொன்சேகாவிற்கு அமைச்சு பதவி எதுவும் வழங்கப்பட்டிருக்கவில்லை. இந்நிலையிலேயே, ஜனாதிபதிக்கு எதிராக சரத் பொன்சேகா நீதிமன்றம் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசியல் குழப்பம் ஏற்பட்டிருந்த காலப்பகுதியில் ஜனாதிபதியை நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கடுமையாக விமர்சித்திருந்தார்.அத்துடன், ஜனாதிபதியை கொலை செய்யும் சத்திட்டத்தில் சரத் பொன்சேகாவிற்கு தொடர்பு இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!