இடைக்கால கணக்கு அறிக்கை நாடாளுமன்றில் நிறைவேறியது

2019ஆம் ஆண்டின் ஜனவரி தொடக்கம் ஏப்ரல் வரையான நான்கு மாதங்களுக்கான அரசாங்க செலவுகளுக்கான நிதியை ஒதுக்கீடு செய்யும், கணக்கு அறிக்கைக்கு சிறிலங்கா நாடாளுமன்றம் நேற்று அங்கீகாரம் அளித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்ட 1765 பில்லியன் ரூபாவுக்கான இந்த கணக்கு அறிக்கை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இதன்போது, கணக்கு அறிக்கைக்கு ஆதரவாக 102 வாக்குகள் அளிக்கப்பட்டன. எதிராக 6 வாக்குகள் அளிக்கப்பட்டன.இதனால் 99 மேலதிக வாக்குகளால் கணக்கு அறிக்கை நிறைவேற்றப்பட்டது.

ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், ஆதரவாக வாக்களித்தனர். ஜேவிபி உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!