மைத்திரிக்கு வேட்டு வைக்கும் மொட்டு கட்சி

எதிர்காலத் தேர்தல்களில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன், இதுவரை எந்த உடன்பாடும் செய்து கொள்ளப்படவில்லை என்று, சிறிலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

சிறிலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து போட்டியிட சிறிலங்கா சுதந்திரக் கட்சி முடிவு செய்திருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியிருந்த நிலையிலேயே, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலர் சாகர காரியவசம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

“அரசியல் கூட்டணியை அமைப்பதற்கான கதவை நாங்கள் திறந்தே வைத்துள்ளோம். ஆனால் இன்னமும் எவருடனும் உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை.

தேர்தல் அறிவிக்கப்பட்டதும், கூட்டணியில் இணைந்து செயற்பட விரும்பும் தரப்புகளுடன் பேச்சு நடத்துவோம்.

எனினும், அந்தக் கூட்டணிக்கு சிறிலங்கா பொதுஜன முன்னணியே தலைமை தாங்கும். அத்துடன், அந்தக் கூட்டணி தாமரை மொட்டு சின்னத்தில் தான் போட்டியிடும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!