” தமிழ் பிரதிநிதி அதிகாரம் செலுத்த வேண்டும் இவ்வொருமைப்பாடு எமது ஆட்சியில் தொடரும்”

நாட்டில் தேசிய அமைச்சாக காணப்படும் கல்வியமைச்சில் தமிழ் பிரதிநிதி அதிகாரம் செலுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே ஐக்கிய தேசிய கட்சி உள்ளது. 2015 ஆம் ஆண்டில் இருந்து கல்வி இராஜாங்க அமைச்சராக தமிழரை நியமித்துள்ளது. எமது ஆட்சியில் இவ்வொருமைப்பாடு தொடரும் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

கல்வி இராஜாங்க அமைச்சராக விஜயகலா மகேஷ்வரன் இன்று வியாழக்கிழமை கடமைகளை பொறுப்பேற்றார். இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய அரசாங்கத்தில் கல்வி துறையில் பல முன்னேற்றகரமான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. நவீன கற்கை துறைகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதே ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான நோக்கம். ஒரு நாடு கல்வித்துறையில் முன்னேற்றமடைந்தால் அங்கு ஏனைய துறைகள் தாமாகவே வளர்ச்சியடையும். இதற்கு நாட்டு மக்கள் அரசியல் விவகாரங்களை தவிர்த்து ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!