ரொட்டி விலை உயர்வுக்காக 19 பேர் பலி

சூடான் நாட்டில் ரொட்டி விலை உயர்வுக்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தினால் உண்டான வன்முறை காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சூடனில் ரொட்டி உற்பத்திக்கான அரச மானியங்கள் அண்மையில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து ரொட்டி விலை கடுமையாக உயர்வடைந்துள்ளதுடன், அதனை எதிர்த்து சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினருடன் இணைந்து பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 19 ஆம் திகதி முதல் ரொட்டி விலை உயர்வுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டக்காரர்கள் பல்வேறு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், கடைகளை சூறையாடி அங்குள்ள பொருட்களை கொள்ளையடித்துச் செல்வதும் அதிகரித்துள்ளது.

போராட்டக்காரர்களை கட்டுப்பாட்டுக்குள் கலவர தடுப்பு பிரிவு பொலிஸார் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் போராட்டக் காரர்களுக்கும் பொலிஸாருக்குமடேயே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனால் இதுவரை இரு பாதுகாப்பு படையினர் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளதாக அரசுத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!