ஜனாதிபதியும் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை! – பல இரகசியங்கள் உள்ளன.

20ஆவது அரசியல் சீர்திருத்தத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார இதனை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிக்க வேண்டும் என்ற யோசனை எதற்காக கொண்டு வரப்பட்டது என்று யாருக்கும் தெரியாது.

இதற்கு பின்னால் பல இரகசியங்கள் உள்ளன. அரசசார்பற்ற அமைப்புக்களும் இந்த சூழ்ச்சியில் பங்கேற்றுள்ளன. ஜே.வி.பியை பொறுத்தவரையில், அது இன்று பலவீனமான கட்சியாக இருக்கிறது. எனவே இந்த பலவீனமான கட்சி கொண்டு வந்துள்ள யோசனையை கிராம மட்டத்தில் உள்ள மக்களும் நிராகரிக்கின்றனர் என்று நாணயக்கார குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் ஜனாதிபதியும் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!