மீண்டும் பங்களாதேஸ் பிரதமராக ஷேக் ஹசீனா தெரிவு

பங்களாதேஸ் பிரதமராக மூன்றாவது முறையாக ஷேக் ஹசீனா தெரிவு செய்யப்பட்டுள்ளார்

பிரதமர் ஹசீனாவின் கூட்டணி தேர்தலில் வெற்றிபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ள அதேவேளை எதிர்கட்சிகள் தேர்தல் முடிவை நிராகரித்துள்ளன

பிரதமர் ஹசீனாவின் அவாமி லீக் தலைமையிலான கூட்டணி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 298 ஆசனங்களில் 287 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

பிரதமர் ஹசீனாவின் காலத்தில் பங்களாதேஸ் பொருளாதார ரீதீயில் முன்னேற்றமடைந்துள்ளதாக பரவலான கருத்து காணப்படும் நிலையிலேயே அவர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்

அவரது ஆட்சிக்காலத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என குற்றச்சாட்டும் காணப்படுகின்றது

இதேவேளை முக்கிய எதிர்கட்சியான பங்களாதேஸ் தேசிய கட்சி ஆறு தொகுதிகளில் மாத்திரம் வெற்றிபெற்றுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தல்களில் மோசடிகள் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள எதிர்கட்சி கூட்டணி நடுநிலையான நிர்வாகத்தின் கீழ் புதிய தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணையகத்தை கேட்டுக்கொண்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது வன்முறைகள் இடம்பெற்ற அதேவேளை வாக்களிப்பு இடம்பெற்ற தினத்தன்று வன்முறைகள் காரணமாக 17 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!