மகிந்தவுக்கு சீன அதிபரின் புத்தாண்டு வாழ்த்து

சீன அதிபர் ஷி ஜின்பிங், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு, புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை கொடுத்தனுப்பியுள்ளார்.

மகிந்த ராஜபக்சவை அவரது இல்லத்தில் சந்தித்த சீனத் தூதுவர் செங் ஷியுவான், சீன அதிபரின் இந்த வாழ்த்து மடலை, நேரில் கையளித்துள்ளார்.

சீன அதிபரின் வாழ்த்துச் செய்தியை, சீனத் தூதுவர் தம்மிடம் கையளித்தார் என்று மகிந்த ராஜபக்ச தனது கீச்சகத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!