சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை நிறுத்தப்படவில்லை ‘

இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மீளாய்வு செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட் நிபுணர்கள் குழு விதந்துரை செய்திருக்கின்ற போதிலும், அது தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று அபிவிருத்தி தந்திரோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்திருக்கிறார்.

‘நிபுணர்கள் குழுவின் அறிக்கை எமக்கு கிடைத்திருக்கிறது. அது தொடர்பாக பிறகு நாம் ஆராய்வோம். ஆனால், சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை நிறுத்தப்படவில்லை. அரசாங்கம் அதை தொடர்ந்து நடைமுறைப்படுத்துகிறது. நிபுணர்கள் குழுவின் விதப்புரைகள் வெறுமனே அபிப்பிராயங்கள்தான்.வர்த்தகத்தையும் ஏற்றுமதியையும் மேம்படுத்துவதற்கு இலங்கை வெளிநோக்கிய திசையிலான கொள்கைகளைக் கடைப்பிடிக்கவேண்டியது முக்கியமானதாகும்’ என்று அமைச்சர் கூறியிருக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!