தலையீடு செய்ய வெளிநாடுகளுக்கு அதிகாரம் இல்லை!

இலங்­கை­யின் அர­சி­யல் சுயா­தீ­னத்­தில் தலை­யீடு செய்ய பிரிட்­ட­னுக்­கும் மேற்­கு­லக நாடு­க­ளுக்­கும் என்ன அதி­கா­ரம் உள்­ளது? என்று கேள்வி எழுப்பியுள்ளார் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் உதய கம்­மன்­பில. நாடா­ளு­மன்­றில் நேற்று உரை­யாற்­றிய போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

கடந்த ஒக்­டோ­பர் மாதம் 26ஆம் திகதி மக்­கள் ஆணை­யால் தெரி­வு­செய்­யப்­பட்ட எமது ஜனாதிபதி, புதிய பிரதமரை நிய­மித்­த­போ­தும், நாடா­ளு­மன்­றத்தை ஒத்­தி­வைத்­த­போ­தும், உயர்­நீ­தி­மன்­றத் தீர்ப்­புக்கு முன்­ன­ரும் பல சந்­தர்ப்­பங்­க­ளி­லும் நேர­டி­யான தலை­யீ­டு­க­ளைச் செய்­த­து­டன், கடும் அழுத்­தங்­க­ளை­யும் கொடுத்­த­னர். பிரிட்­டன் தூது­வர் நாடா­ளு­மன்­றத்தை கூட்­டு­மாறு கூறி­யி­ருந்­தார். நாடா­ளு­மன்­றத்தை 2 மாதங்­க­ளுக்கு ஒத்­தி­வைக்­கும் அதி­கா­ரம் ஜனாதிபதிக்கு உள்­ளது. இதே­போன்று பிரிட்­டன் மகா­ராணி எலி­ச­பத்­துக்­கும் நாடா­ளு­மன்­றத்தை ஒத்­தி­வைக்­கும் அதி­கா­ரம் அந்த நாட்­டின் அர­ச­மைப்­பின் பிர­கா­ரம் உள்­ளது.

அவர் நாடா­ளு­மன்­றத்தை ஒத்­தி­வைக்­கும் சந்­தர்ப்­பங்­க­ளில் ஏன் நாடா­ளு­மன்­றத்தை ஒத்­தி­வைக்­கின்­றீர்­கள்? உட­ன­டி­யாக நாடா­ளு­மன்­றத்தை கூட்­டுங்­கள் என்று எம்­மால் கோர முடி­யுமா?. எவ்­வாறு சுயா­தீ­ன­மான ஒரு நாட்­டின் விட­ய­தா­னங்­க­ளில் தலை­யீடு செய்ய முடி­யும்?.

நாடா­ளு­மன்­றில் மகிந்த ராஜ­பக்ச அர­சுக்கு பெரும்­பான்மை இல்லை என்று சபா­நா­ய­கர் கூறி­ய­போது மேற்­கு­லக நாடு­க­ளின் தூது­வர்­கள் மேலே துள்­ளிக்­கொண்டு மகிழ்ச்­சியை வெளிப்­ப­டுத்­தி­னர். ஒரு கட்­சிக்கு பெரும்­பான்மை இல்லை என்­ற­தும் அவர்­கள் எவ்­வாறு மகிழ்ச்­சி­ய­டைய முடி­யும்?. அவர்­கள் அவர்­க­ளது நாட்­டுக்­கா­க ­தான் இங்கு செயற்­பட முடி­யும்.

மேற்­கு­ல­கின் மறு­வ­டிமே ஐ.தே.கவின் ஆட்சி. இது மிக­வும் அச்­சு­றுத்­த­லா­னது. இலங்­கை­யின் அர­சி­யல் நட­வ­டிக்­கை­க­ளில் மேற்­கு­லக நாடு­கள் இவ்­வாறு தலை­யீடு செய்­துள்ள வர­லாறு இதற்கு முன்பு எப்­போ­தும் இடம்­பெ­ற­வில்லை. உயர்­நீ­தி­மன்­றத்­தின் தீர்ப்பு வெளி­யாக முன்­னர் உயர்­நீ­தி­மன்­றம் எவ்­வாறு செயற்­பட வேண்­டு­மென மேல்­கு­லக நாடு­க­ளின் தூது­வ­ரா­ல­யங்­கள் கருத்­து­களை வெளி­யிட்­டி­ருந்­தன. அமெ­ரிக்க, இந்­தியா பிரிட்­டன் உள்­ளிட்ட நாடு­க­ளில் இருந்து நாடா­ளு­மன்­றத்தை உட­ன­டி­யாக கூட்­டு­மாறு தொலை­பேசி அழைப்­பு­கள் வரு­கின்­றன.

இவ்­வாறு 67 தொலை­பேசி அழைப்­பு­கள் வந்­தி­ருந்­தன. எனவே, இன்று இலங்­கை­யில் இடம்­பெ­றும் மேற்­கு­லக நாடு­க­ளின் செயற்­பா­டு­கள் கடும் அச்­சு­றுத்­த­லா­னவை என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!