அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவோரை தடுக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு

அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார்.

அதற்காக ரூபா 39,693 கோடி (5.7 பில்லியன் டொலர்) நிதி ஒதுக்கும்படி அமெரிக்க பாராளுமன்றத்திடம் ஒப்புதல் கேட்டார்.

அதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து ஒப்புதல் வழங்கவில்லை.

அதனால் ஆண்டு பட்ஜெட் பாராளுமன்றத்தில் நிறைவேறவில்லை. இதனால் கடந்த 20 நாட்களாக அரைவாசி அரசு அலுவலகங்கள் செயல்படாமல் முடங்கிக்கிடக்கின்றன.

சமீபத்தில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு ட்ரம்ப் ஏற்பாடு செய்தார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. தனது நிபந்தனைகள் ஏற்கப்படாததால் அங்கிருந்து வெளியேறினார் ட்ரம்ப்.

அரசுத் துறைகள் முடக்கம் நீடிக்கும் நிலையில், டாவோஸ் சுற்றுப்பயணத்தை ட்ரம்ப் ரத்து செய்துள்ளார். உலக பொருளாதார மன்ற மாநாட்டிற்காக டாவோஸ் செல்லும் மிகவும் முக்கியமான பயணத்தை ரத்து செய்திருப்பதாக டிரம்ப் தனது டுவிட்டர் செய்தியில் தெரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!