மார்ச் 20இல் ஜெனிவாவில் புதிய தீர்மானம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் மார்ச் 20 திகதி இலங்கை குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுவிவாதம் இடம்பெறவுள்ளது என ஜெனீவா அலுவலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 40 வது அமர்வு பெப்ரவரி 25 திகதி முதல் மார்ச் 22 திகதி வரை ஜெனீவாவில் இடம்பெறவுள்ளது.

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் மார்ச் மாதத்திற்குள் முன்னேற்றத்தை காண்பிப்பதாக இலங்கை வழங்கிய வாக்குறுதிகளை தொடர்ந்து 40 வது அமர்வின் நிகழ்ச்சி நிரலில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. மனித உரிமை ஆணையாளர் அல்லது பிரதி ஆணையாளரால் இலங்கை குறித்த அறிக்கை சமர்பிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை அடுத்த மாதம் வெளியாகும். அதன் பின்னர் மார்ச் 20 திகதி இது குறித்த விவாதம் இடம்பெறும் என ஜெனீவா பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை தான் வழங்கிய வாக்குறுதிகளை மிகமெதுவாகவே நடைமுறைப்படுத்த முயல்கின்றது என்பதை அடிப்படையாக வைத்து இலங்கைக்கு எதிராக புதிய தீர்மானத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என தகவல்கள் வெளியாகியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!