ஈரான் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான அனுமதியை கோரியது வெள்ளை மாளிகை- வெளியானது புதிய தகவல்

ஈரானிற்கு எதிராக தாக்குதல்களை மேற்கொள்வதற்கான அனுமதியை வெள்ளை மாளிகை கடந்த வருடம் கோரியிருந்தது என அமெரிக்க செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த செப்டம்பரில் ஈராக் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை இலக்கு வைத்து ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் மேற்கொண்ட எறிகணை தாக்குதலை தொடர்ந்தே வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு சபை ஈரான் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து பென்டகனை கோரியது என அமெரிக்க செய்தித்தாள் தெரிவித்துள்ளது

முன்னாள் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அமெரிக்க தூதரகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ஒரு யுத்த நடவடிக்கை என வர்ணித்ததுடன் அமெரிக்கா உடனடியாக பதிலடி கொடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த வேண்டுகோள் பென்டகனையும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என அமெரிக்க செய்தித்தாள்

தெரிவித்துள்ளது.

எனினும் பென்டகன் ஈரான் மீது தாக்குதலை நடத்தவேண்டும் என்ற வெள்ளை மாளிகையின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டது என தெரிவித்துள்ள அமெரிக்க செய்தித்தாள் ஈரான் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான திட்டமொன்று தயாரிக்கப்பட்டதா என்பதும் டிரம்பிற்கு இது குறித்து தெரிந்திருந்தா என்பதும் தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!