மஹிந்த – சந்திரிகா தனிப்பட்ட மோதல் : சுதந்திரக் கட்சி துணை நிற்காது – தயாசிறி

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவுக்கு காணப்படும் தனிப்பட்ட கோபங்களுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அதற்கேற்ப செயற்பட வேண்டும் என எதிர்பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கடந்த 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரை காணப்பட்ட மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிகளுடனும் குழுக்களுடனும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இணைந்து செயற்படுவதை தான் அனுமதிக்கப்போவதில்லை எனத் தெரிவித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

சந்திரிகா குமாரதுங்க குறிப்பிடுவதைப் போன்று மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து சுதந்திரக் கட்சி செயற்படக் கூடாதெனில் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்பதா அவருடை நிலைப்பாடு என்பதே எமது கேள்வியாகும். அது தான் அவருடைய நிலைப்பாடு என்றால் அதற்கு நாம் ஒரு போதும் இணக்கம் தெரிவிக்கப்போவதில்லையென மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!