அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ள மக்கள் விடுதலை முன்னணி

மாகாணசபை தேர்தலையும் ஜனாதிபதி தேர்தலையும் நடத்த முன்னர் பொதுத் தேர்தலை நடத்தி மக்கள் ஆணை என்னவென்பதை அறிந்துகொள்ளுங்கள் என மக்கள் விடுதலை முன்னணி அராங்கத்திற்கு சாவால் விடுத்துள்ளது.

இரண்டு பிரதான கட்சிகளும் தமது இருப்பை தக்கவைக்க மக்கள் ஆணையுடன் விளையாடுகின்றனர் எனவும் அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

மாகாணசபைத் தேர்தல் குறித்து ஜனாதிபதி ஆராய்ந்து வருகின்ற நிலையிலும் ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி தேர்தலை நடத்தக் கோருகின்ற நிலையிலும் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு என்னவென வினவிய போதே கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!