மோசமான நடத்தையால் நாடுகடத்தப்படும் பிரித்தானிய குடும்பம்!

நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய குடும்பம் ஒன்று மோசமான நடத்தை காரணமாக நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர். பொது இடத்தில் குப்பை போட்டமை, உணவு உண்டதன் பின்னர் உணவகத்தில் பணம் செலுத்தாமை, திருட்டு ஆகிய குற்றச்சாட்டுக்கள் இவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஆக்லந்து நகர மேயர் ஃபில் கொஃப் (Phil Goff) பொலிஸாரிடம் கோரியிருந்தார்.

இந்தநிலையிலேயே பண்புகள் தொடர்பான விவகாரத்தினை மீறிய குறித்த பிரித்தானிய குடும்பத்தினை நாடு கடத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நியூஸிலாந்தின் குடிநுழைவுத் துறை உதவித் தலைமை நிர்வாகி பீட்டர் டெவோய் (Peter Devoy) குறிப்பிட்டுள்ளார். குறித்த பிரித்தானிய குடும்பத்தினர் இன்று(வியாழக்கிழமை) அல்லது நாளை நாடு கடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!