பெண் விஞ்ஞானியை கடித்து கொன்ற முதலை

இந்தோனேசியாவில் பெண் விஞ்ஞானியை அவர் வளர்த்த முதலையே கடித்து கொன்று தின்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்தோனேசியாவின் சுலவேசி தீவைச் சேர்ந்தவர் டெசி துவோ. 44 வயதாகும் இவர் பெண் விஞ்ஞானியாவார். வட சுலவேசியில் மினாஹாசா என்ற இடத்தில் ஆய்வுக்கூடம் வைத்து பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்தார்.

இவர் தனது ஆய்வுக் கூடத்தின் அருகில் ஒரு முதலையை செல்லப் பிராணியாக வளர்த்து வந்தார். அதற்கு மேரி என்று பெயரிட்டு இருந்தார்.

இந்த நிலையில் பெண் விஞ்ஞானியை அவர் வளர்த்த முதலையே கடித்து கொன்று தின்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றி அங்கிருந்தவர்கள் கூறுகையில், முதலைக்கு உணவு வழங்கும் போது அவரது கைகளை முதலை கடித்து தின்று விட்டது.

இதனால் தண்ணீரில் விழுந்த அவரது வயிற்றுப் பகுதியையும் முதலை தின்று விட்டதாக தெரிவித்தனர். இந்த முதலை 14 அடி நீளம் உள்ளது. அதை பெண் விஞ்ஞானி எந்த அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாக வளர்த்து வந்து இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி