பொம்மை துப்பாக்கியை காட்டி போலீசை மிரட்டிய சிறுவன் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் பொம்மை துப்பாக்கியை காட்டி போலீசை மிரட்டிய 14 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அமெரிக்காவில் பீனிக்ஸ் புறநகர் பகுதியில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.

அப்போது 14 வயது சிறுவன் ஒருவன் காரின் அருகே துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தான். போலீசாரை பார்த்ததும் அவன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.

அவனது நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவன் ஒரு கார் திருடன் என நம்பினர். எனவே அவனை விரட்டிச் சென்றனர்.

அப்போது அவன் போலீசாரை நோக்கி தான் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டினான். உடனே போலீசார் அந்த சிறுவனை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் குண்டு காயம் அடைந்த அவன் ரத்த வெள்ளத்தில் மயங்கினான். பின்னர் அவன் ஆஸ்பத்திரியில் உயிரிழந்தான்.

இதற்கிடையே சிறுவன் வைத்திருந்த துப்பாக்கியை கைப்பற்றிய போலீசார் அதை பரிசோதனை செய்தனர். அது ‘1911 ஏர்சாப்ட்’ ரக பொம்மை துப்பாக்கி என தெரியவந்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!