சேனா படைப்புழுவின் தாக்கத்தை இல்லாதொழிக்க விஞ்ஞான தொழிநுட்ப உதவி- சுஜீவ சேனசிங்க

சேனா படைப்புழுவின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு பிரதான நான்கு விஞ்ஞான தொழிநுட்ப ஆராய்ச்சி நிறுவனங்களின் தொழிநுட்ப உதவியினை பெற்றுக்கொண்டு இந்த படைப்புழு தாக்கத்தை முழுமையாக நாட்டில் இருந்து இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளதாக விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

மேலும் நாடுபூராகவும் பரவிவரும் சேனா படைப்புழுவின் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கென விவசாய திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைவாக இந்த விசேட ஆராய்ச்சி நடவடிக்கைகள் ஆரமபிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கென அமெரிக்க விஞ்ஞான தொழிநுட்ப ஆராய்ச்சி நிபுனர்களின் ஆலோசனை பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தீவிரமாக பரவிவரும் சேனா படைப்புழு தாக்கம் குறித்து விளக்கமளிக்கும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று புதன்கிழமை விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சில் இடம்பெற்றது. அதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!