அவுஸ்ரேலிய கண்டத்தினை கண்டுபிடித்தவரின் கல்லறை லண்டனில் கண்டுபிடிப்பு!

அவுஸ்ரேலிய கண்டத்தினை முதன்முதலில் கண்டுபிடித்தவரின் கல்லறை லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லண்டனின் யூஸ்டன் (Euston) ரயில் நிலையத்திற்கு அருகே இந்த கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அவுஸ்ரேலிய கண்டத்தினை முதன்முதலில் கண்டுபிடித்த பிரித்தானிய கடற்படைத் தளபதியான மத்யூ ஃப்ளிண்டர்ஸ் (Matthew Flinders) இன் கல்லறையே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர் 1814ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி அடக்கம் செய்யப்பட்டிருந்தார். இறப்பதற்கு முன்னர் அவர் அவுஸ்ரேலியாவில் 1802ஆம் ஆண்டு முதல் 1803ஆம் ஆண்டுவரை பல்வேறு ஆய்வுகளையும் முன்னெடுத்திருந்தார்.

பிரித்தானிய கடற்படைத் தளபதியான மத்யூ ஃப்ளிண்டர்ஸ் (Matthew Flinders)A Voyage to Terra Australis என்ற நூலையும் வெளியிட்டிருந்தார். அதில் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அவர் அவுஸ்ரேலியா ஒரு கண்டம் என்பதையும் நிரூபித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!