அமெரிக்கா இல்லாத சந்தர்ப்பத்தை சாதகமாக்க வேண்டும்! – அரசிடம் கோரும் சிங்கள அமைப்பு.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் பிரேரணையினை கொண்டுவந்த அமெரிக்கா இன்று மனித உரிமை பேரவையில் இருந்து விலகியுள்ளமையினை நாம் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என இலங்கைக்கான தேசப்பற்று பூகோள அமைப்பின் பிரதிநிதி சுஷாந்தி அப்புகொட தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேணையிற்கு தொடர்ந்து அரசாங்கம் இணை அனுசரணை வழங்குவதால் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படாது. இராணுவத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மனித உரிமை பேரவையில் இம்முறையில் இடம் பெறவுள்ள கூட்டத்தொடரில் இறுதியான தீர்மானம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!