மாகாண சபைகளை, ‘மாகாண அரசு’ என அழைக்கக்கூடாது – சிறிலங்கா அதிபர் கண்டிப்பு

மாகாண சபைகளை, மாகாண அரசுகள் என்று அழைக்கக் கூடாது என்று நிதி ஆணைக்குழுவுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கடந்த 1ஆம் நாள் நிதி ஆணைக்குழுவின் கூட்டத்தில் உரையாற்றிய அவர், இந்த விவகாரத்தை எழுப்பினார்.

அரசியலமைப்பில் மத்திய அரசாங்கம், மாகாண அரசாங்கம் என்று கூறப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட முறைமையை ஆய்வு செய்வதற்கான தேவையை முன்னைய அரசாங்கங்கள் புறக்கணித்து வந்துள்ளதாகவும், சிறிலங்கா அதிபர் குற்றம்சாட்டினார்.

இதுபற்றிய ஆய்வு நடத்த இரண்டு முறை அமைச்சரவைக்கு தாம் முன்மொழிந்ததாகவும், முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தலைமையில் ஒரு குழுவை நியமித்த போதும், அது செயற்படவில்லை.” என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!