நிரூபித்தால் பதவி விலகுவேன்! – சமல் ராஜபக்ச சவால்.

சிறிலங்கா எயார் லைன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை கூட்டம் தனது இல்லத்தில் நடைபெற்றது என்பதை நிரூபித்தால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவேன் என்று சவால் விடுத்துள்ளார் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ.

சிறிலங்கா எயார் லைன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை கூட்டம் முன்னாள் சபாநாயரின் உத்தியோகபூர்வ இல்லத்திலும் இடம்பெற்றுள்ளது. அதனால் அந்த நிறுவனத்தில் எவ்வாறான மோசடிகள் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதை மக்கள் உணர்ந்து கொள்வார்கள் என நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதன்போது முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, ஒழுங்கு பிரச்சினையை முன்வத்து, அவ்வாறு கூட்டம் நடத்தி தீர்மானங்கள் எடுத்திருப்பதை நிருபித்தால் எனது எம்.பி. பதவியை இராஜினாமா செய்வதாக குறிப்பிட்டார்.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்களான சுனில் ஹந்துன்னெத்தி சமல் ராஜபக்ஷ் மற்றும் ரன்ஜன் ராமநாயக்க ஆகியோருக்கிடையில் வாக்குவாதங்கள் இடம்பெற்றன.

பாராளுமன்றத்தில் கோப் குழு அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் கலந்து கொண்டு இராஜாங்க அமைச்சர் ரன்ஜன் ராமநாயக்க, ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை கூட்டம் முன்னாள் சபாநாயகர் சமால் ராஜபக்ஷ்வின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றுள்ளதாக கோப் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா எயார் லைன்ஸ் நிறுவனத்தின் கூட்டம் சபாநாயகரின் வாசஸ்தலத்தில் நடத்த எந்த தேவையும் இல்லை. அப்படியாயின் யாருடைய தேவைக்கு இது நடத்தப்படுள்ளது என்பதை உணர்ந்து கொள்ளலாம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!