கொலைகார ராஜபக்ச கும்பல் தமிழர்களுக்கு தீர்வைத் தராது! – சரத் பொன்சேகா

கொலை­கார ராஜ­பக்ச கும்­பல் தமிழ் மக்­க­ளுக்கு ஒரு­போ­தும் அர­சி­யல் தீர்வை வழங்க முன்­வ­ராது. கடந்­த­கால அனு­ப­வங்­க­ளில் இருந்து தமிழ் மக்­க­ளும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ன­ரும் இதை உணர்ந்­து ­விட்­டார்­கள் என்று முன்­னாள் இரா­ணு­வத் தள­ப­தி­யும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பீல்ட் மார்­சல் சரத் பொன்­சேகா தெரி­வித்­தார்.

முன்­னாள் எதிர்க்­கட்­சித் தலை­வ­ர் மகிந்த ராஜ­பக்ச கடந்த செவ்­வாய்க்­கி­ழமை தமிழ்ப் பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்­க­ளைச் சந்­தித்­தி­ருந்­தார். இதன்­போது, இனப் பிரச்­சி­னைக்­கான தீர்வு முயற்­சி­களை கூட்­ட­மைப்பே குழப்­பி­யது என்­றும், எதிர்­கா­லத்­தில் ஆட்­சிக்கு வந்­தால் தமிழ் மக்­க­ளு­டன் பேச்சு நடத்தி தீர்வை வழங்­கு­வேன் என்­றும் கூறி­யி­ருந்­தார். இது தொடர்­பில்கருத்து வெளியிட்டுள்ள சரத் பொன்­சேகா –

‘மீண்­டும் ஆட்­சி­யைப் பிடித்து பிரதமர் ஆசனத்தில் அமர்ந்­தி­ருக்­க­வும் தனது சகோ­த­ரர்­க­ளில் ஒரு­வரை ஜனாதிபதியாக்கவுமே மகிந்த ராஜ­பக்ச விரும்­பு­கின்­றார். இதற்கு தமி­ழர் தரப்­பின் பேரா­த­ரவு அவ­ருக்­குத் தேவைப்­ப­டு­கின்­றது. இதற்­கா­கவே தமி­ழர் மனதை வெல்­லும் வகை­யி­லும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மீது வீண்­ப­ழி­யைச் சுமத்­தும் வகை­யி­லும் அவர் கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றார்.

சுமார் பத்து வரு­டங்­கள் ஆட்­சி­யில் இருந்­த­வர் மகிந்த ராஜ­பக்ச. அவ­ருக்கு தமி­ழர் மீது உண்­மை­யான அக்­கறை இருந்­தி­ருந்­தால் அப்­போதே தீர்வை வழங்­கி­யி­ருக்­க­லாம்.

நான் ஜனாதிபதி தேர்­த­லில் போட்­டி­யிட்­ட­போது வடக்கு, கிழக்கு தமிழ் மக்­கள் எனக்கு அமோக வாக்­கு­களை அளித்­த­னர். ஆனால், அந்த வாக்கு வீதத்­தில் இரு­பது வீத வாக்­கு­க­ளைக்­கூட வடக்கு, கிழக்­கில் அன்று மகிந்த பெற­வில்லை.

2010ஆம் நடை­பெற்ற ஜனாதிபதி தேர்­தல் 2015ஆம் ஆண்டு தேர்­தல் மாதிரி நீதி­யாக நடந்­தி­ருந்­தால் நான் ஜனாதிபதியா­கி­யி­ருப்­பேன். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்க என்னை நம்பி வாக்­க­ளித்த தமிழ் மக்­க­ளி­டம் நான் தீர்­வுத் திட்­டத்தை முன்­வைத்து உரிய தீர்வை வழங்­கி­யி­ருப்­பேன் என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!