மாகந்துரே மதுஷ் உள்ளிட்டவர்களை டுபாய் சிறையில் அடைப்பதே நல்லது! -இராணுவத் தளபதி

டுபாயில் கைது செய்யப்பட்ட மாகந்துரே மதுஷ் என்ற பாதாளக்குழு தலைவர் உள்ளிட்டவர்களை அங்குள்ள சிறைச்சாலையில் தடுத்து வைத்திருப்பதே புத்தி சாதூரியமானது என இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த சந்தேக நபர்களை கைது செய்தமைக்கான புகழாரம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரைச் சாரும். இந்த சந்தேக நபர்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டால் பல்வேறு தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி தப்பிச் செல்லக்கூடிய சாத்தியங்கள் உண்டு.

பாதாள உலகக்குழுக்களை இல்லாதொழிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது . விசேட அதிரடிப்படையினரின் அர்ப்பணிப்பு மற்றும் அதன் பொறுப்பதிகாரி லத்தீப்பிற்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு என்பன மிகவும் முக்கியமானவை.

இராணுவத்துடன் இணைந்து புலனாய்வு தகவல்களை பரிமாறிக் கொண்டு சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள முடியும் என தாம் விசேட அதிரடிப்படையினரை ஊக்கப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!