மகிந்த ஆட்சியைப் பிடிப்பார் என்று இந்திய வல்லுனர்கள் நம்புகிறார்கள் – பீரிஸ்

மகிந்த ராஜபக்ச ஆதரவு சக்திகள் இந்த ஆண்டு தேசிய தேர்தலில் வெற்றியைப் பெற்று அரசாங்கத்தை அமைக்கும் என்று இந்தியாவின் வல்லுனர்களும், சிவில் சமூகமும் நம்புகிறது என, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“இந்தியாவின் பிரதான நாளிதழ் ஒன்றினால் ஒழுங்கு செய்யப்பட்ட கருத்தரங்கு ஒன்றில் கடந்தவார இறுதியில் மகிந்த ராஜபக்ச பங்கேற்றிருந்தார்.

அங்கு அவர் இந்திய – சிறிலங்கா உறவுகளின் எதிர்காலம் என்ற தொனிப்பொருளில் உரையாற்றினார். அதில் பெருமளவு இந்திய வல்லுனர்களும், புலமைச்சான்றோரும் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு ஆட்சிமாற்றம் நிகழும் என்று அவர்கள் நம்புகின்றனர் என்பது தெளிவாகத் தெரிந்தது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!