ஜனாதிபதி கொலை சதித்திட்டம் : அறிக்கை இன்னும் வெளியிடப்படாதது ஏன்? – நளின் பண்டார கேள்வி

ஜனாதிபதி கொலை சதித்திட்டத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். ஜனாதிபதி கொலை சதித்திட்டம் தொடர்பிலான அறிக்கையினை இரண்டு வாரங்களில் வெளியிடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருந்த போதிலும் அந்த அறிக்கை இதுவரையில் சமர்ப்பிக்கப்படவில்லை.

எனவே அவர் மீதான கொலை சதித்திட்டத்தின் அறிக்கையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவாக வெளியிட வேண்டும் என்று அபிவிருத்தி உத்திகள் மற்றும் சர்வதேச வர்த்தக பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.

அபிவிருத்தி உத்திகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி கொலை சதித்திட்டம் தொடர்பில் அரசாங்கமும் மிக அவதானத்துடனேயே செயற்ப்பட்டு வருகின்றது.

இதனை சாதாரணமான விடயமாக எடுத்துக்கொள்ளமுடியாத நிலையில் ஜனாதிபதி மீதான கொலை சதித்திட்டம் தொடர்பான தகவல்களை மூடிமறைக்க இடமளிக்கவும் முடியாது.

கடந்த காலங்களில் ஜனாதிபதி கொலை சதித்திட்டம் தொடர்பில் வெவ்வேறான கருத்துக்கள் வெளியாகியிருந்ததுடன் நாமல் குமாரவுக்கும் இந்த கொலை சதி விவகாரத்துக்கும் தொடர்புள்ளதாககவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்திருந்தது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!