அமெரிக்காவின் சிறந்த வனவிலங்கு புகைப்பட விருதை தட்டிச்சென்ற சிங்கங்கள்!

அமெரிக்காவில் இந்த ஆண்டிற்கான சிறந்த வனவிலங்கு புகைப்பட கலைஞருக்கு விருது வழங்கும் விழாவில், 45000க்கும் மேற்பட்ட புகைப்பட கலைஞர்களின் புகைப்படங்கள் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் பார்வைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் 25 புகைப்படங்கள் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டன. இவற்றுள் மக்களின் ஆதரவை அதிகம் பெறும் புகைப்படத்துக்கு விருது வழங்கப்படும். இதையடுத்து இந்த அருங்காட்சியகத்தில் தேர்வு செய்யப்பட்ட 25 புகைப்படங்கள் மக்களின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டு , வாக்குகள் பெறப்பட்டன. இந்த வாக்குகளின் கணக்கெடுப்பில், இரண்டு ஆண் சிங்கங்களின் பாசத்தினை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த ‘பாண்ட் ஆஃப் ப்ரதர்ஸ்’ எனும் தலைப்பில் வைக்கப்பட்ட புகைப்படத்திற்கு அதிக வாக்கு கிடைத்தது. நியூசிலாந்தைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் டேவிட் லாய்ட் இந்தப் புகைப்படத்தை எடுத்திருந்தார்.

இந்த புகைப்படத்திற்கு அடுத்தபடியாக, மேலும் சில புகைப்படங்களுக்கு அதிக வாக்குகள் பதிவாகின. அவற்றில் ஃபாக்லேண்ட் பகுதியில் மூன்று பென்குயின்கள் சூரிய அஸ்தமனத்தின்போது உற்சாகமாக நடனமாடும் படம் (விம் வான் டென் ஹீவர்), லண்டனில் நரி ஒன்று சாலையோரம் நடந்து செல்லும் படம் (மேத்யூ மாறன்), மூன்று ஓநாய்கள் ஒன்று சேர்ந்து எலும்பினை கவ்வுவது போன்ற படம் (பென்ஸ் மாட்டே, ஹங்கேரி) ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!