விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு – 3 மாதங்கள் ஒத்திவைப்பு!

??????????????????????????????????????????????????????????
வட மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூவர் மீதான நீதிமன்றத்தை அவமதிப்பு மனு தொடர்பான விசாரணையை வரும் மே 21ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

பா. டெனிஸ்வரனை மாகாண அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்தும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட கட்டளையை நடைமுறைப்படுத்தாது முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், அமைச்சர்கள் சிவநேசன், அனந்தி சசிதரன் ஆகிய மூவரும் நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றஞ்சுமத்தப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய கட்டளைக்கு அமைய, தம்மை மீண்டும் அமைச்சுப் பதவிக்கு நியமிக்காமல் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செயற்பட்டுள்ளமையினால் அவர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக பா. டெனிஸ்வரன் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

டெனீஸ்வரனின் மனுவுக்கு ஆட்சேபனை தெரிவித்து விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூவரால் ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஆட்சேபனை மனுவை கடந்த வாரம் மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூவரும் நீதிமன்றை அவமதித்தனர் என்ற குற்றச்சாட்டு மனு மீதான விசாரணை மேன்முறையீட்டு மன்றால் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும் மனு மீதான விசாரணையை எதிர்வரும் மே 21 மற்றும் மே 31ஆம் திகதிகளில் முன்னெடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!