இன்று கொழும்பு வருகிறார் நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்

நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மரியன் ஹகென் இரண்டு நாட்கள் பயணமாக இன்று சிறிலங்காவுக்கு வரவுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது அவர், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, நிதியமைச்சர் மங்கள சமரவீர, உள்ளிட்டோரைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காணாமல் போனோருக்கான பணியகம், மனித உரிமைகள் ஆணைக்குழு, சிவில் சமூக மற்றும் வணிகப் பிரதிநிதிகளையும் நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சந்தித்துப் பேசவுள்ளார்.

அத்துடன் வடக்கிற்கும் இவர் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!