வரவு – செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடியாது – அநுர பிரியதர்ஷன யாபா

அரசாங்கத்தினால் செலுத்தப்படவுள்ள வெளிநாட்டு கடன்களை நோக்கும் போது, 2019 ஆம் ஆண்டுக்காக முன்வைக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை ஒரு போதும் நிறைவேற்றிக் கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாபா தெரிவித்தார்.

பொது ஜன பெரமுன காரியாலயத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் தற்போது ஐக்கிய தேசிய கட்சி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுதந்திர வர்த்தக வலயங்களை அமைத்து வருகின்றது. அதன் ஒரு திட்டமாக குருணாகல் – பிங்கிரய வேலைத்திட்டமாகும். இதன் மூலம் இந்த மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. எனவே அரசாங்கம் இவ்வாறு தொடர்ந்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதற்கு பதிலாக பொதுத் தேர்தலுக்குச் சென்று புதியதொரு அரசாங்கம் தெரிவு செய்யப்படுமானால் நாட்டை அபிவிருத்தி பாதையில் முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!