“இராணுவத்தை காட்டி அரசியல் செய்தவர்கள், இராணுவத்துக்கு சலுகை வழங்கவில்லை”

போதைப்பொருளுக்கு அடிமையாகி சிறைச்சாலைகளில் இருப்பவர்களுக்கு புனர்வாழ்வளித்து விடுவிக்க வரவு செலவு திட்டம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக அம்பேபுஸ், வீரவில மற்றும் தொம்பே பகுதிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இந்த வருடத்துக்கான வரவுசெலவுத்திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பின் இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த காலத்தில் யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தை காட்டி அரசியல் செய்தவர்கள் இராணுவத்துக்கு எந்த சலுகையையும் வழங்கவில்லை. ஆனால் நாங்கள் இராணுவத்தினருக்கு பல நிவாரணங்களை இந்த வரவு செலவு திட்டம் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!