அமெரிக்க தூதுவரைத் தேடிச் சென்ற மகிந்த – பசில்

அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்சுடன், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநரான பசில் ராஜபக்ச இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

கொழும்பில் அமெரிக்கத் தூதுவரை மகிந்த ராஜபக்ச மற்றும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோருடன் இணைந்து தாம் சென்று சந்தித்ததாக, பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அனைத்துலக சமூகத்துடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டிய தேவை உள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், பல்வேறு நாடுகளின் தூதுவர்களை தொடர்ச்சியாகச் சந்தித்துப் பேசவுள்ளதாகவும், பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனினும், அமெரிக்க தூதுவருடனான சந்திப்பு எப்போது இடம்பெற்றது என்ற விபரத்தை பசில் ராஜபக்ச வெளியிடவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!