மத்தலவுக்கு வரவுள்ள அவுஸ்ரேலியாவின் கடல்சார் கண்காணிப்பு விமானம்

அவுஸ்ரேலியாவின் கடல்சார் கண்காணிப்பு விமானம் ஒன்று மத்தல விமான நிலையத்தில் வரும் ஏப்ரல் 1ஆம் நாள் தரையிறங்கவுள்ளதாக அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.

அவுஸ்ரேலிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் குறூப் கப்டன் சியான் உன்வின் கொழும்பில் நேற்று தகவல் வெளியிடுகையில்,

“இந்தியாவில் இன்னொரு நடவடிக்கைக்காக புறப்படுவதற்கு முன்னதாக, இந்த கண்காணிப்பு விமானம், ஏப்ரல் 1ஆம் நாள் இரவு மத்தலவில் தரித்து நிற்கும்.

இதன்போது, கடல்சார் கண்காணிப்பு விவகாரங்கள் தொடர்பாக சிறிலங்கா விமானப்படை மற்றும் கடற்படையுடன் அவர்கள் ஈடுபாடுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்புக் கிடைக்கும்.

அத்துடன், இந்தோ-பசுபிக் முயற்சி-2019இன் கீழ்,மேலும் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அவுஸ்ரேலிய கடற்படைக் கப்பல் ஒன்று பின்னர் பயணம் மேற்கொள்ளும்” என்று தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!