சிறிலங்காவின் இணை அனுசரணை நிலைப்பாட்டில் மாற்றமில்லை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் இணை அனுசரணை வழங்கும் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நாளை, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் சிறிலங்கா தொடர்பான அறிக்கை மீதான விவாதம் இடம்பெறும்.

இதில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான குழுவினர் பங்கேற்று அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவுள்ளனர்.

நாளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவின் தரப்பில், உரையாற்றவுள்ள வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, ஜெனிவா தீர்மானத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் இணை அனுசரணை வழங்குவது பற்றி அறிவிப்பார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜெனிவா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கக் கூடாது என்று சிறிலங்கா எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!