கால அவகாசம் என்பது தவறு – ஐ.நா மேற்பார்வையே நீடிப்பு!

ஜெனிவாவில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் இலங்கை அரசாங்கத்துக்கு காலஅவகாசம் வழங்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

காலஅவகாசம் வழங்கப்பட்டமை என்பது தவறான விடயம். இலங்கை அரசாங்கம் மீதான இரண்டு வருட கால சர்வதேச மேற்பார்வை காலமே நீடிக்கப்பட்டுள்ளது எனவும் இதுவே ஜெனிவா பிரேரணை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையின் இலங்கை தொடர்பான உப குழுக் கூட்டத்தில் நேற்று உரையாற்றியமை குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!