ஜெனிவாவில் இன்று முக்கிய விவாதம்!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இன்று இலங்கை தொடர்பான முக்கியமான விவாதம் இடம்பெறவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை இன்று பேரவையில் சமர்ப்பிக்கப்படும். இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமை மேம்பாடு பற்றி உயர்ஸ்தானிகர் மிஷெல் பஷெலெற், அறிக்கையின் ஊடாக பிரஸ்தாபித்திருந்தார்.

இந்த அறிக்கை பற்றி இலங்கை அரசாங்கத்தின் பதில் இன்று வழங்கப்படும். வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன பேரவையில் பதிலளித்து உரையாற்றுவார். அத்துடன் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் இன்றைய அமர்வின் போது தமது கருத்துக்களை வெளியிடுவார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!