“யுத்த காலத்தில் இடம்பெற்ற குற்றங்கள் நிரூபிக்கப்படுமாயின் பதிலளிக்க தயார்”

யுத்தகாலத்தில் இடம்பெற்ற குற்றங்கள் நிரூபிக்கபடுமாயின் தான் எந்தவொரு நிதிமன்றத்துக்கும் வந்து பதிலளிக்க தயாராக உள்ளதாகவும் இந்த பிரச்சினைகளுக்கு உள்நாட்டு விசாரணைகளினூடாகவே தீர்வினை பெற்றுக்கொள்ள முடியுமென்றும் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார.

களனி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

யுத்த செயற்பாடுகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் தமது சுய அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்திக்கொண்டமையினாலேயே இன்று இலங்கை சர்வதேச விசாரனைகளை அனுகவேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தகாலத்தில் இடம்பெற்ற குற்றசெயல்கள் தொடர்பில் சர்வதேசத்தின் விசாரனைகளில் இருந்து வெளியேற வேண்டுமானால் குற்றவாளிகள் மீதான விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!