மன்னார் புதைகுழி அகழ்வு – முடிவெடுப்பதில் இழுபறி!

மன்­னா­ர் புதைகுழியில் இருந்து, மீட்­கப்­பட்ட மனித எச்­சங்­கள் தொடர்­பான துறை­சார்ந்த அறிக்­கை­களை மூன்று மாதங்­க­ளுக்­குள் பெற்­றுக் கொள்­வது என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. மன்­னார் நீதி­மன்­றத்­தில் நேற்று இடம்­பெற்ற இரண்டு மணித்­தி­யால கலந்­து­ரை­யா­ட­லின் பின்­னர் மேற்­படி முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது.

மன்­னார் நீதி­வான் ரி.சர­வ­ண­ராஜா, களனி பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரி­யர் சோம­தேவ, காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பணி­ய­கத்­தின் தலை­வர் சாலிய பீரிஸ், காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் சார்­பில் மன்­றில் முன்­னி­லை­யா­கும் சட்­டத்­த­ரணி வி.நிரஞ்­சன், மன்­னார் தட­ய­வி­யல் பொலி­ஸார், புதை­குழி அகழ்­வுக்­குப் பொறுப்­பான சட்­ட­ம­ருத்­துவ அதி­காரி சமிந்த ராஜ­பக்ச, குரு­நா­கல் மற்­றும் புத்­த­ளம் சட்ட மருத்­துவ அதி­கா­ரி­கள், காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் சங்­கத் தலைவி உள்­ளிட்ட பலர் கலந்து கொண்­ட­னர்.

புதை­கு­ழி­யைப் பாது­காத்­தல், பொலிஸ் பாது­காப்பு வழங்­கல், மீட்­கப்­பட்ட மனித எச்­சங்­களை உரிய முறை­யில் பாது­காத்­தல் உள்­ளிட்ட விட­யங்­கள் தொடர்­பில் கவ­னம் செலுத்­தப்­பட்­டது.

புதை­குழி அகழ்­வின் ­போது மீட்­கப்­பட்ட தட­யப் பொருள்­கள் தொடர்­பான துறை­சார்ந்த பெறு­பேற்று அறிக்­கை­களை எதிர்­வ­ரும் 3 மாதங்­க­ளுக்­குள் சம்­மந்­தப்­பட்ட தரப்­புக்­க­ளி­ட­மி­ருந்து பெற்­றுக் கொள்­வ­தற்­குத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் தட­யப் பொருள்­களை ஆய்­வுக்­காக பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு எடுத்­துச் செல்­வ­தற்கு நீதி­மன்­றின் அனு­ம­தி­யைப் பெற்­றுக் கொள்­வது தொடர்­பி­லும் ஆரா­யப்­பட்­டுள்­ளது. இந்த அறிக்­கை­க­ளின் அடிப்­ப­டை­யில் எதிர்­கால நகர்­வு­கள் தீர்­மா­னிக்­கப்­ப­ட­வுள்­ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!